சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு; ரஷ்யா பாராட்டு

மாஸ்கோ: சர்வதேச அளவிலான பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வைக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
இந்திய சுதந்திர தினம் முன்னிட்டு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது.
கூட்டு முயற்சிகள் மூலம் இந்திய ரஷ்ய ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். எங்கள் நட்பு மக்களின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இந்திய சுதந்திர தினம் முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.





மேலும்
-
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஹூமாயூன் கல்லறை குவிமாடம் சரிந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்
-
டிசம்பரில் இந்தியா வருகிறார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி: பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்
-
சத்தீஸ்கரில் சோகம்; கார்-லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி; ஒருவர் படுகாயம்
-
பெங்களூருவில் வீட்டில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்: 8 வயது சிறுவன் பலி, நேரில் சென்ற சித்தராமையா