குவைத்தில் கள்ளச்சாராயத்தால் விபரீதம்: 51 பேருக்கு டயாலிசிஸ், 21 பேருக்கு பார்வையிழப்பு

13

குவைத் சிட்டி: குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் உயிரிழந்த நிலையில் 51 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 21 பேர் பார்வயை இழந்துள்ளனர். 31 பேருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


மேற்காசிய நாடான குவைத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டை, சேர்ந்தவர்கள், கட்டட தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மது விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை குடித்த 63 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 13 பேர் இறந்துவிட்டனர். 51 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 பேருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும், அவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயரிழந்தவர்களில் ஒருவரான சச்சின் கேரள மாநிலம் கண்ணூரின் இரினவு பகுதியை சேர்ந்தவர். இவர் 3 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வருகிறார். இன்று அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.


கள்ளச்சாராயத்தை விற்றவர்களை கண்டுபிடிக்க குவைத் போலீசார் சிறப்பு படை அமைத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய தூதரகம் உதவி எண்(+965-65501587, WhatsApp and regular calls) அறிவித்துள்ளது.

Advertisement