செஸ்: குகேஷ் 6வது இடம்

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் குகேஷ் 6வது இடத்தில் உள்ளார்.
'கிராண்ட் செஸ் டூர்' 10வது சீசன், 6 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன் 4வது தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் நடக்கிறது. இதில் 'ரேபிட்' முறையில் நடந்த போட்டியில் (9 சுற்று) 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 4வது இடம் பிடித்தார். தற்போது 'பிளிட்ஸ்' முறையில் போட்டிகள் (18 சுற்று) நடக்கிறது.
அமெரிக்காவின் ஆரோனியன், ஷாம் ஷாக்லாந்துக்கு எதிரான முதலிரண்டு சுற்றை 'டிரா' செய்த குகேஷ், அடுத்த இரண்டு சுற்றில் வெஸ்லே (அமெரிக்கா), நாடிர்பெக்கிற்கு (உஸ்பெகிஸ்தான்) எதிராக தோல்வியடைந்தார். 5வது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் லீனியர் டோமிங்குவெசை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தார்.
பேபியானோ காருணா (அமெரிக்கா), லெ குவாங் லீம் (வியட்நாம்) ஆகியோருக்கு எதிரான 6, 7வது சுற்றை 'டிரா' செய்த குகேஷ், பிரான்சின் மேக்சிம் வாச்சியர்-லக்ரேவுக்கு எதிரான 8வது சுற்றில் தோல்வியடைந்தார். ஒன்பதாவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் கிரிகோரி ஓபரின் மோதினர். இப்போட்டி 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றின் முடிவில் ஒரு வெற்றி, 5 'டிரா', 3 தோல்வி என, 13 புள்ளிகளுடன் குகேஷ் 6வது இடத்தை வியட்நாம் வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் ஆரோனியன் (19.0 புள்ளி) உள்ளார்.
மேலும்
-
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
-
கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு ஆர்வமாக 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள் வீட்டுக்குத் தேவையானதை ஒரே இடத்தில் வாங்கலாம் 18 வரை நடக்கிறது 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
-
ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது
-
ஜாம், பழச்சாறு தயாரிப்பு பயிற்சி
-
மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது
-
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்