தொடரை வென்றது இந்தியா 'ஏ': கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா தோல்வி

பிரிஸ்பேன்: கடைசி ஓவரில் அசத்திய இந்தியா 'ஏ' பெண்கள் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 'ஏ' வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் 2வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு அலிசா ஹீலி (91) நம்பிக்கை தந்தார். கிம் கார்த் (41*), எலா ஹேவார்டு (28) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்தது. இந்தியா 'ஏ' அணி சார்பில் மின்னு மணி 3 விக்கெட் சாய்த்தார்.
யஸ்திகா அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு ஷபாலி வர்மா (4) ஏமாற்றினார். யஸ்திகா பாட்யா (66), கேப்டன் ராதா யாதவ் (60) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். தனுஜா கன்வர், அரைசதம் விளாசினார்.
கடைசி ஓவரில், 3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டன. எலா ஹேவார்டு பந்துவீசினார். முதல் பந்தில் தனுஜா (50) அவுட்டானார். அடுத்த 3 பந்தில், 5 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்த பிரேமா ரவாத் (32*) வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியா 'ஏ' அணி 49.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 266 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
மேலும்
-
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
-
கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு ஆர்வமாக 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள் வீட்டுக்குத் தேவையானதை ஒரே இடத்தில் வாங்கலாம் 18 வரை நடக்கிறது 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
-
ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது
-
ஜாம், பழச்சாறு தயாரிப்பு பயிற்சி
-
மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது
-
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்