ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்

பெகா: பெகா ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், ஆகான்ஷா சாலுங்கே முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவில் பெகா ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், தென் ஆப்ரிக்காவின் ஹேலி வார்டு மோதினர். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய 17 வயதான அனாஹத் 3-0 (11-4, 11-9, 14-12) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஆகான்ஷா சாலுங்கே, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டிரா ஹேடன் மோதினர். மொத்தம் 24 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஆகான்ஷா 3-0 (11-4, 11-7, 11-3) என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement