பிரனேஷ், வின்சென்ட் 'சாம்பியன்': சென்னை செஸ் தொடரில் அசத்தல்

சென்னை: சென்னை செஸ் தொடரில் இந்தியாவின் பிரனேஷ் (சாலஞ்சர்ஸ் பிரிவு), ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (மாஸ்டர்ஸ்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு 9வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கீமர், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 9வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), 55வது நகர்த்தலில் சகவீரர் பிரனவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), முரளி கார்த்திகேயன் (கருப்பு) மோதிய மற்றொரு 9வது சுற்றுப் போட்டி 49வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின அவோன்டர் லியாங் மோதிய போட்டியும் 'டிரா' ஆனது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சக வீரர் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தினார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்த நான்கு இடங்களை அனிஷ் கிரி (5.0 புள்ளி), அர்ஜுன் (5.0), முரளி கார்த்திகேயன் (5.0), நிஹால் சரின் (4.5) உறுதி செய்தனர்.
பிரனேஷ் சாம்பியன்
சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில் இந்தியாவின் பிரனேஷ் (வெள்ளை), ஹர்ஷ்வர்தன் (கருப்பு) மோதினர். இதில் பிரனேஷ் 46வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற 9வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ஆர்யன் சோப்ரா (எதிர்: ஹரிகா), திப்தயன் கோஷ் (எதிர்: வைஷாலி), இனியன் (எதிர்: அபிமன்யு புரானிக்), அதிபன் (எதிர்: லியோன் மென்டோன்கா) வெற்றி பெற்றனர்.
ஒன்பது சுற்றின் முடிவில், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும்
-
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
-
கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு ஆர்வமாக 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள் வீட்டுக்குத் தேவையானதை ஒரே இடத்தில் வாங்கலாம் 18 வரை நடக்கிறது 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
-
ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது
-
ஜாம், பழச்சாறு தயாரிப்பு பயிற்சி
-
மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது
-
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்