நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

24

சென்னை: நாகாலாந்து கவர்னரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.


தமிழக பாஜவின் முகமாக இருந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது கண்ணியமான பேச்சினை, பாஜ கட்சியினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ரசித்துக் கேட்பர். அந்தளவுக்கு நாகரிகமாக, நகைச்சுவையுடன் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் இல கணேசன். நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.


மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த நிலையில் அவர் நாகாலாந்து மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் சென்னை வந்த அவர், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.


கடந்த 8 ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தார்.

இந்நிலையில், இன்று( ஆக.,15) மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இல கணேசனின் வாழ்க்கை வரலாறு



பெற்றோர்: லக்குமிராகவன் - அலமேலு


பிறந்த தேதி : 16.02.1945

பிறந்த இடம்: தஞ்சாவூர்

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி

வகித்த பதவிகள்:

2021 முதல் 2023 வரை மணிப்பூர் கவர்னராக இருந்தார். பிறகு 2023 முதல் நாகாலாந்து கவர்னராக இருந்தார். இடையில் 2022ம் ஆண்டு 4 மாதம் மேற்கு வங்க கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்தார்.

ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக செயலாற்றினார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பிரசாரகராக மாறினார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது கொண்ட பற்று காரணமாக, திருமணம் செய்யாமல் பிரசாரகராக பணியாற்றினார்.

பா.ஜ., தேசிய செயலாளராகவும், துணைத்தலைவராகவும், தமிழக பாஜ தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.பாஜ செயற்குழு உறுப்பினராகவும், 1991ல் அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தலின் போது தென் சென்னையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு 2016 ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2018 வரை இந்தப் பதவியில் இருந்தார்.


கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



ஜனாதிபதி திரவுபதி முர்மு


நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவர் ராஜ்யசபா எம்பி, மணிப்பூர், மேற்கு வங்கம் கவர்னர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். நீண்ட கால பொது வாழ்க்கையில், மக்களின் நலனுக்காக பணியாற்றினார். தமிழகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


பிரதமர் மோடி


நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் மறைவு வேதனை அளிக்கிறது. தேசத்தைக் கட்டமைக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு பக்தியுள்ள தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார். தமிழகம் முழுவதும் பாஜகவை வளர்க்க அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாசாரத்தின் மீதும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.


@twitter@https://x.com/narendramodi/status/1956365514881560863 twitter


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


இல.கணேசன் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக பாஜவுக்காக தீவிரமாக பணியாற்றியவர். கட்சி கட்டமைப்பை கட்டியெழுப்பியதே அவரது பலம். இறுதி மூச்சு வரை ஆர்ப்பணிப்புள்ள bசவகராக பணியாற்றினார்.


@twitter@https://x.com/nsitharaman/status/1956359736871485687 twitter


அண்ணாமலை

நாகாலாந்து மாநில கவர்னரும் பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, இல. கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், பாஜ வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.இல. கணேசன் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


@twitter@https://x.com/annamalai_k/status/1956353343401709700 twitter



முதல்வர் ஸ்டாலின்

இல.கணேசன் மறைவு செய்தி கேட்டு துயரமுற்றேன். பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்த நீண்ட கால பொது வாழ்வுக்கு சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் செய்யாமல் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தவர். எளிமை. அதிர்ந்து பேசாமல் அனைவரையும் அரவணைத்து செல்பவர். மாற்று கொள்கை தலைவர்களிடமும் மரியாதையுடனும், மாண்புடனும் நடந்து கொண்டவர். அரசியல் நாகரிகத்தை பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர்.


Latest Tamil News

@block_Y@தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். block_Y

அவரைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Advertisement