முதுமலையில் தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை

கூடலுார்; முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றி, 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில், வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பாமா, காமாட்சி, சந்தோஷ், பொம்மன் ஆகியவை வரிசையில் நிற்க, அதன் மீது பாகன்கள், தேசிய கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன்னால் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா கொடி ஏற்றினார். வன ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். வரிசையில் நின்றிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். விழாவில், வனச்சரகர்கள் சிவக்குமார், பாலாஜி, குலோத்துங்கசோழன், பாஸ்கர், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
யானைக்கு பிறந்த நாள் விழா தெப்பக்காடு யானைகள் முகாமில், 3 குட்டிகள் உட்பட 30 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். அதில், மறைந்த வளர்ப்பு யானை ருக்குவுக்கு, 1971 ஆக., 15ல் சந்தோஷ் யானை பிறந்தது.
55வது பிறந்த தினம் துவங்குவதால், அதனை தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறையினர் கொண்டாடினர். கேழ்வரகு, தேங்காய், இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட கேக்கை முதுமலை துணை இயக்குனர் வித்யா வெட்டி, வளர்ப்பு யானை சந்தோஷுக்கு ஊட்டினார். தொடர்ந்து, யானை பாகன் மாறன், வனச்சரகர்கள் யானைக்கு கேக் ஊட்டினர். இந்நிகழ்வை சுற்றுலா பயணிகள் 'போட்டோ' எடுத்தனர்.
மேலும்
-
சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்
-
திருப்பதிக்கு 7 டன் காய்கறிகள் அனுப்பிய கோலார் பக்தர்கள்
-
பியூட்டி பார்லர்களில் சோதனை பெலகாவியில் விதிமீறல் அம்பலம்
-
டி.டி.ஆர்., ஆவண மோசடி வழக்கில் ரூ.4.06 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
-
கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை
-
தர்மஸ்தலாவில் மாயமான பெண்: எஸ்.ஐ.டி.,யில் சகோதரர்கள் புகார்