உடலில் தேசிய கொடி சின்னத்துடன் தொழிலாளி விழிப்புணர்வு பயணம்

திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் பகுதியில் வசிப்பவர் சக்திவேல், 55. பனியன் நிறுவன தொழிலாளி.

உடல் முழுக்க தேசிய கொடியின் சின்னம் வரைந்து, டூவீலரில் தேசிய கொடி கட்டியபடி, சிக்கண்ணா கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திரதின விழாவில்பங்கேற்றார்.

பின், தனது டூவீலரில் பல்லடம், மங்கலம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தார். அங்கிருந்து தாராபுரம் ரோடு வழியாக, அரசு மருத்துவக்கல்லுாரி,சி.டி.சி., கார்னர், காங்கயம் ரோடு, நல்லுார் வழியாக ஊத்துக்குளி ரோடு வந்தடைந்தார்.

பின் அவிநாசி சென்று அங்கிருந்து செங்கப்பள்ளி சென்று, மீண்டும் திருப்பூர் வந்து சேர்ந்தார். காலை துவங்கி, மாலை, 5:00 மணி வரை, கிட்டத்தட்ட, 100 கி.மீ., துாரம் இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

சக்திவேல் கூறியதாவது:

நாட்டின், 50வது சுதந்திர தின நாளில் இருந்து ஆண்டுதோறும், இத்தகைய விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன். எனக்கு போலீஸ் அல்லது ராணுவத்தில் இணைய வேண்டும் என்பது, சிறு வயது துவங்கிய ஆசை.

ஆனால், அது நிறைவேறவில்லை; இருப்பினும், தேசத்தின் மீதானபற்று அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

நான் டூவீலரில் பயணிக்கும் வழித்தடமெங்கும் உள்ள மக்கள் என்னுடன் மொபைல் போனில், 'செல்பி' எடுத்துக் கொண்டு வாழ்த்துகின்றனர்.

Advertisement