கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு ஆர்வமாக 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்; வீட்டுக்குத் தேவையானதை ஒரே இடத்தில் வாங்கலாம்! 18 வரை நடக்கிறது 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி

கோவை; 'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது.
சிறுவர் - சிறுமியர், கல்லுாரி மாணவியர், இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் எண்ணற்றப் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன.
குடும்பம் குடும்பமாக மக்கள் வந்திருந்து ஆர்வமாக பொருட்களை தேர்வு செய்து, 'பர்ச்சேஸ்' செய்தனர். இக்கண்காட்சி, 18ம் தேதி வரை நடக்கிறது.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து, ஒரே கூரையின் கீழ் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் இல்லக்கனவை நனவாக்கும் 'பில்டு எக்ஸ்போ' மற்றும் ஆட்டோ மொபைல், விதவிதமான உணவுகளை ருசிக்க உணவு திருவிழாவுடன் கூடிய 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, 'கொடிசியா' வளாகத்தில் நேற்று துவக்கின.
கோவை கலெக்டர் பவன்குமார், ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். 'தினமலர்'வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன், 'சத்யா ஏஜன்சீஸ்' பொது மேலாளர் ஆபிரஹாம், இ.எல்.ஜி.ஐ., (எல்.ஜி.,) அல்ட்ரா நிறுவன இயக்குனர் பாலகிருஷ்ணன், 'பேபர்' நிறுவன மண்டல மேலாளர் விமலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இல்லத்தரசிகளை கவரும் கண்காட்சி
வளாகத்துக்குள் நுழைந்ததும் 'சத்யா ஏஜன்சி' அரங்கு, பார்வையாளர்களை வரவேற்கிறது. எல்.இ.டி., - ஓ.இ.எல்.டி., என விதவிதமான 'டிவி'கள், பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏ.சி., மூன்று பர்னர், நான்கு பர்னர்களுடன் கூடிய ஸ்டவ், மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை தேர்வு செய்யலாம்.
அடுத்தடுத்த ஸ்டால்களுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து சென்றால், இல்லத்தரசிகளை கவரும் வகையில், வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உங்கள் வீட்டு சமையலறையை 'ஸ்மார்ட் கிச்சனாக' மாற்றியமைக்க விரும்பினால், அதற்கான மாடலும் கண்காட்சியில் இருக்கிறது. நம்ம வீடு ரொம்ப சின்னதா இருக்கு; சமையலறையும் ரொம்ப சிறுசு; ஸ்மார்ட் கிச்சனாக மாற்ற முடியுமா என்கிற கவலையை விட்டு விடுங்க. 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' வாங்க; அரங்கில் சொல்லுங்கள். உங்கள் வீட்டுக்கு ஏற்ப கிச்சனை 'ஸ்மார்ட்'டாக மாற்றிக் கொடுப்பார்கள். பாத்திரம் கழுவ சோம்பல்ஏற்படுவது வாடிக்கை; பாத்திரங்களை கழுவிக் கொடுக்கவும் மெஷின் வந்து விட்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்து, அந்த மெஷின் எவ்வாறு கழுவிக் கொடுக்கிறது என்பதை ஒரு அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இவை தவிர, உங்கள் வீட்டு சமையலறைக்கு இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறதென 'லிஸ்ட்' எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை தேர்வு செய்து வாங்கலாம்.
கொட்டிக் கிடக்கு ஆடை ரகங்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லுாரிக்குச் செல்லும் மாணவியர் மற்றும் குட்டீஸ்களுக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கான விதவிதமான ஆடை ரகங்களை தேர்வு செய்யலாம். பொட்டு ரகங்கள், ஜிமிக்கி, வளையல், பராம்பரியமிக்க செயின் வகைகள், அழகுசாதனப் பொருட்கள் வாங்கலாம். கைத்தறி ஆடைகளும் கிடைக்கும். ஜன்னல்களை அலங்கரிக்கும் திரைச்சீலை, படுக்கை விரிப்பு, தலையணை, மெத்தை உள்ளிட்டவையும் வாங்கலாம்.
விதவிதமான பர்னிச்சர்
வீட்டில் சோபா போடுவதற்கு இடமே இல்லையே என நினைக்க வேண்டாம். ஹாலில் உள்ள இட வசதியை கூறினால், அதற்கேற்ப சோபா தயார் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன. வீட்டுக்கு பூசியுள்ள வர்ணத்துக்கேற்ப சோபா தயார் செய்து கொடுக்கின்றன. இதுதவிர, கட்டில், டீ பாய், ஊஞ்சல், வுட்டன் பீரோ, டைனிங் டேபிள், டிரஸிங் டேபிள் உள்ளிட்டவை தேர்வு செய்யலாம்.
மசாஜ்க்கு கருவி
உடம்பு ஒரு சுற்று அதிகமாகியிடுச்சு; உடற்பயிற்சி செய்யணும்; மெனக்கெட்டு 'ஜிம்'முக்கு செல்ல வாய்ப்பில்லை; வெளியே 'வாக்கிங்' செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்வதற்கும், மசாஜ் செய்வதற்கும் தேவையான கருவிகளை பர்ச்சேஸ் செய்யலாம். பாதத்துக்கு மசாஜ் செய்வது எப்படி என செயல் விளக்கம் செய்து காட்டப்படுகிறது. ஒவ்வொரு அரங்காக பார்த்து, 'பர்ச்சேஸ்' செய்து விட்டு வருவதற்குள் லேசாக பசி எடுக்க ஆரம்பிக்கும். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே, 'ஷாப்பிங்' செய்ய வசதியிருக்கிறது. இன்னொரு அரங்கில் கோலி சோடா அருந்தலாம்.
90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள்
90ஸ் கிட்ஸ்களின் பழைய நினைவுகளை தூண்டும் வகையில், சுத்துற மிட்டாய், புளிப்பு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் பேப்பர் அப்பளம் போன்ற, 30க்கும் மேற்பட்ட 90ஸ் கிட்ஸ்களின் 'பேவரெட்' மிட்டாய்களுக்கு தனி கடையே உள்ளது. இது மட்டுமின்றி, நொறுக்கு தீனி பிரியர்களை திருப்தி படுத்தும் விதமாக ஸ்நாக்ஸ் வகைகள் இருக்கின்றன. இதுதவிர, பல வகையான அல்வா, கேரளா சிப்ஸ், மைசூர் முறுக்கு, ராஜஸ்தான் அப்பளம், வத்தல் வகைகள் ஏராளம்.
குட்டீஸ் உலகம்
குட்டீடசை குஷிப்படுத்த 'கேம் ஜோன்' ஒதுக்கப்பட்டிருக்கிறது. படகு சவாரி, வாட்டர் ரோலிங், புல்லட், காளையை அடக்கும் விளையாட்டு உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகள் இருக்கின்றன. பசியை போக்க, உணவுத்திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இட்லி, தோசையில் ஆரம்பித்து சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பன் பரோட்டா, ஐஸ்கிரீம், பாப்கார்ன் என உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்கலாம்.
குடும்பம் குடும்பமாக மக்கள் ஆர்வத்தோடு வந்து, தேவையானவற்றை வாங்கிச் செல்கின்றனர். அரங்குகளில் விற்பனை ஜோராக நடக்கிறது.
கண்காட்சியில் ஒரு 'ரவுண்டு' சுத்தி வாங்க; வீட்டுக்குத் தேவையான பொருட்களை அள்ளிச் செல்லலாம்; 18ம் தேதி (திங்கட்கிழமை) வரை கண்காட்சி நடக்கிறது; கொண்டாட்டமாய் 'பர்ச்சேஸ்' செய்யலாம்!
@block_B@
'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, இ.எல்.ஜி.ஐ., (எல்.ஜி.,) அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, 'வுட் ஸ்பார்க்', நியூ மென்ஸ், சுஜாதா, பேபர், ஆல்பா பர்னிச்சர் மற்றும் 'ஜி ஸ்கொயர்' ஆகிய நிறுவனங்கள், 'கோ--ஸ்பான்சர்'களாக கரம் கோர்த்திருக்கின்றன. இந்நிறுவனங்கள் அமைத்துள்ள ஸ்டால்களில், ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி, வரும், 18ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. உணவு இடைவேளை இன்றி செயல்படும். கண்காட்சியை மணிக்கணக்கில் பார்வையிட்டு தேவையானதை வாங்கலாம்.block_B
@block_B@
எத்தனை நாட்களுக்கு தான் வாடகை வீட்டில் வசிப்பது; சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது லட்சிய கனவாக இருக்கிறது. அதற்கு நேரம் கூடும் காலம் வந்து விட்டது. 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' ஒரு பகுதியில், 'பில்டு எக்ஸ்போ' நடக்கிறது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடலாம். மனை அல்லது வீடு வாங்க தேவையான கடனுதவி செய்வதற்கு வங்கிகளும் அரங்குகள் அமைத்துள்ளன. சொந்த வீடு இருக்கும்; குடும்பத்தோடு வெளியூர் செல்வதற்கு கார் தேவைப்படும். என்ன கார் வாங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்திருப்பீர்கள். அத்தேடலுக்கு தீர்வு காணும் வகையில், அரங்குகள் உள்ளன. உங்கள் விருப்பதற்கேற்ற கார் மாடல்களை தேர்வு செய்யலாம். இதுதவிர, பைக், ஸ்கூட்டர்களும் வாங்கலாம். காட்சிக்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.block_B
மேலும்
-
2026 மார்ச்சுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் 'சிசிடிவி'
-
ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு
-
சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்
-
திருப்பதிக்கு 7 டன் காய்கறிகள் அனுப்பிய கோலார் பக்தர்கள்
-
பியூட்டி பார்லர்களில் சோதனை பெலகாவியில் விதிமீறல் அம்பலம்
-
டி.டி.ஆர்., ஆவண மோசடி வழக்கில் ரூ.4.06 கோடி மதிப்பு சொத்து முடக்கம்