டி.டி.ஆர்., ஆவண மோசடி வழக்கில் ரூ.4.06 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
பெங்களூரு: டி.டி.ஆர்., எனும் மேம்பாட்டு உரிமைகளை மாற்றுதல் ஆவண மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர், பில்டர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு சொந்தமான 4.06 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சாலை, பூங்கா, நடைபாதை அமைக்கும் பணிகளின் போதும், நிலம் கையகப்படுத்தும் போதும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் வழங்குவதற்கு பதிலாக டி.டி.ஆர்., ஆவணங்கள் வழங்கப்படும்.
இதை பயன்படுத்தி பணம் செலுத்தாமல், கட்டடத்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான தளங்கள் கட்ட முடியும். இந்த ஆவணங்களை வேறு நபர்களுக்கும் விற்க முடியும்.
டி.டி.ஆர்., ஆவணங்கள் வழங்குவதில், மாநகராட்சியில் 2009 முதல் 2015ம் ஆண்டு வரை மோசடி நடந்து உள்ளது. இந்த மோசடியில் சில மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பெங்களூரு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, 2019ல் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், வி.ஆர்.ஹெச்.பி.எல்., தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ரத்தன் லாத்துக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இவர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, டி.டி.ஆர்., ஆவணங்களை வாங்கி, நகரில் உள்ள பல பில்டர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து, 27 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்தாக தெரிய வந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வந்தது. கடந்த மார்ச் 23ம் தேதி, ரத்தன் லாத், பில்டர்கள், மாநகரா ட்சி அதிகாரிகள், தரகர்கள் சுரேந்தர்நாத், கவுதம், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான 4.06 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு
-
பிரேவிஸ் குறித்து அஸ்வினால் கிளம்பிய சர்ச்சை... சென்னை அணி நிர்வாகம் கொடுத்த விளக்கம்
-
மக்கள் செய்த பிழை: சீமான் பேட்டி
-
ம.பி.யில் சோகம்; மினி பஸ்- லாரி மீது மோதியதில் இசைக்கலைஞர்கள் 4 பேர் பலி; 11 பேர் காயம்
-
பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 2 பேர் பலி
-
துணை ஜனாதிபதி தேர்தல்; என்டிஏ எம்பிக்களுடன் பிரதமர் மோடி 19ம் தேதி ஆலோசனை