திருப்பதிக்கு 7 டன் காய்கறிகள் அனுப்பிய கோலார் பக்தர்கள்

கோலார்: ஷிராவண மாதம் என்பதால், கோலார் நகரில் வசிக்கும் ஏழுமலையான் பக்தர்கள், திருப்பதி கோவிலில் அன்னதானம் செய்ய ஏழு டன் காய்கறிகளை அனுப்பினர்.

கோலார் நகரின், பி.சி. லே - அவுட்டில் வசிக்கும் பிரேம் குமார் மற்றும் அவரது நண்பர்கள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள். தங்களால் முடிந்த திருப்பணிகளை செய்து வருகின்றனர்.

ஷிராவண மாதம் என்பதால், திருப்பதி கோவிலில் நடக்கும் அன்னதானத்துக்கு, காய்கறிகள் அனுப்ப முடிவு செய்தனர்.

அதன்படி கோலார், சிந்தாமணி மார்க்கெட்களில் பீன்ஸ், பீட்ரூட், வெள்ளரிக்காய், காரட், குடமிளகாய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சுரக்காய் உட்பட பல்வேறு காய்கறிகளை வாங்கினர்.

இவற்றை கொண்டு செல்ல, நேற்று திருப்பதியில் இருந்து வாகனம், கோலாரின் பி.சி., லே - அவுட்டுக்கு வந்தது. வாகனத்துக்கு பூஜை செய்த பக்தர்கள், காய்கறிகளை அனுப்பி வைத்தனர்.

Advertisement