கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை

பெங்களூரு: பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 35 ஆண்டுகளில், கடந்த 13ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28.1 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும். கடந்த 13ம் தேதி, பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 22.6; குறைந்தபட்சம் 19.4 டிகிரி செல்ஷியாகவும் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

இதனால், அன்று பகலிலேயே இரவு போல குளிராக காணப்பட்டது. அதுமட்டுமின்றி இயல்பை விட அன்று 5.6 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருந்தது. இது பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 35 ஆண்டுகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை.

இதற்கு முன்பு 1990 ஆகஸ்ட் 20ம் தேதி, பெங்களூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.7 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement