பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 2 பேர் பலி

பெங்களூரு: பாய் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.



கர்நாடக மாநிலம் கேர் ஆர் மார்க்கெட் அருகே, நாகர்தாபேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்தனர், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.



இது குறித்து ஹலசூரு கேட் போலீசார் கூறியதாவது:

உயிரிழந்தவர்கள் மதன் சிங் 38, சங்கீதா 33 மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் மிதேஷ் 7, விஹான் 5 மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் குமார் 26 என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மதன் சிங் ராஜஸ்தானைச் சேர்ந்தவர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்தக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வந்தார். பிளாஸ்டிக் சமையலறைப் பொருட்கள், பாய்கள் மற்றும் சமையலறைப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஒரு சிறிய உற்பத்திப் பிரிவை அவர் நடத்தி வந்தார். அவர் கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்தார்.

Advertisement