கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹூய்ன் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சோ ஹூய்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டில்லிக்கு வந்தது சிறப்பானதாக நினைக்கிறேன். இந்திய மக்களின் ஆழமான கலாசாரத்திற்கு தலைவணங்குகிறேன். நான் கொரிய நாட்டு தூதராக பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சிறப்பான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நான் கொரிய நாட்டு தூதராக இருந்த போது, வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கரை, பல்வேறு விஷயங்களுக்காக சந்தித்து பேசியுள்ளேன். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்கிறோம், என்றார்.


மேலும்
-
காட்டு மாடுகள் மோதலை ரசித்த சுற்றுலா பயணிகள்
-
உண்டியல் உடைப்பு
-
முதல்வர் கோப்பை விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் வருகை
-
போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய சத்துணவு அமைப்பாளர் மீது வழக்கு
-
தலைவர், துணைத்தலைவர் 'ஈகோ'வால் முடங்கிய நிர்வாகம்; கெங்குவார்பட்டி பேரூராட்சியில் மூன்று ஆண்டில் 10 செயல் அலுவலர்கள் மாற்றம்
-
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்