கரீபியன் கடலில் வலுப்பெறும் எரின் புயல்: துறைமுகங்கள் மூடல்

வாஷிங்டன்: கரீபியன் கடலில் உருவான எரின் புயல் வலுப்பெற்று வருகிறது. இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், ஆறு துறைமுகங்கள் மூடப்பட்டு உள்ளன.
கரிபியன் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவான அங்குயில்லாவில் இருந்து வடகிழக்கில் 150 மைல் தொலைவில் இந்த புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, லீவர்ட் தீவு, விர்ஜின் தீவு மற்றும் பியூர்டோ ரிகோ இடையே வார இறுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக காற்று மணிக்கு 157 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாயும் அபாயம் உள்ளதாகவும் குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த புயல் அடுத்த வாரம் அமெரிக்கா மற்றும் பெர்முடாவில் இருந்து விலகி மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் உருவான புயல்களை விட எரின் புயல் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த புயல் காரணமாக விர்ஜின் தீவுகள் தாமஸ் மற்றும் ஜான் தீவு துறைமுகங்களையும், பியூர்டி ரிகோவில் உள்ள துறைமுகங்களையும் மூடப்பட்டு உள்ளது.
எரின் புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அலைகள் பல மீட்டர் தூரம் எழும்புவதுடன், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
காட்டு மாடுகள் மோதலை ரசித்த சுற்றுலா பயணிகள்
-
உண்டியல் உடைப்பு
-
முதல்வர் கோப்பை விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் வருகை
-
போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய சத்துணவு அமைப்பாளர் மீது வழக்கு
-
தலைவர், துணைத்தலைவர் 'ஈகோ'வால் முடங்கிய நிர்வாகம்; கெங்குவார்பட்டி பேரூராட்சியில் மூன்று ஆண்டில் 10 செயல் அலுவலர்கள் மாற்றம்
-
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்