ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்க மறுப்பது சிக்கலான சூழ்நிலை; ஜெலன்ஸ்கி வருத்தம்

கீவ்: ரஷ்யா போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்ததை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: ஐரோப்பிய நாட்டு தலைவர்களின் ஆதரவுக்கு நன்றி.

போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்க மறுப்பது சிக்கலான சூழ்நிலையை உருவாக்குகிறது.
தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒரு எளிய உத்தரவை நிறைவேற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால், அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வு உருவாக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.


நாங்கள் ஒன்றாக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபடுகிறோம். அமெரிக்க அதிபர் டிரம்புடனான திங்கட்கிழமை சந்திப்புக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.
ஐரோப்பிய நாட்டு தலைவர்களின் கொள்கை ரீதியான அறிக்கையை உக்ரைனில் உள்ள நாங்கள் வரவேற்கிறோம்.


அவர்களின் மிக முக்கியமான உதவிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைவரின் ஒற்றுமையும் ஒவ்வொன்றையும் பலப்படுத்துகிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Advertisement