குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி

3

ஆமதாபாத்: குஜராத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தினர் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது. இதையடுத்து, கார்கள் தீப்பற்றிக்கொண்டன. விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணி மேற்கொண்டனர்.


இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


போலீசார் கூறுகையில், ''இன்று பிற்பகல் 3:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், காரில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது, என்றனர்.

Advertisement