குருநாதசுவாமி கோவில் திருவிழா நிறைவு: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்


அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் பண்டிகை இறுதி நாளான நேற்று, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.


ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, அந்தியூர் புதுப்பா-ளையம் குருநாதசுவாமி கோவிலில் நடப்பாண்டு ஆடிப்பெரும் தேர்த்திருவிழா கடந்த, 13ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. இறுதி நாளான நேற்று, ஈரோடு மட்டுமின்றி, கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் வந்தனர். ராட்டினம், கப்பல் உள்ளிட்ட துாரி வகைகளில் விளையாடவும் மற்றும் சர்க்கஸ் விளையாட்டுகளை விளையாட, மாலை, 4:௦௦ மணி முதல் இரவு, 10:௦௦ மணி வரை, சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் ஆர்வம் காட்டினர். அவ்வப்-போது தலைக்காட்டிய துாறல் மழைக்கு நடுவில், மக்கள் உற்சாக-மாக பொழுதை கழித்தனர். குதிரை சந்தைகளில் பெரும்பாலான குதிரைகள் விற்கப்பட்டதால், அப்பகுதியில் மக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தின்பண்டம், பலகார கடைகளிலும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை ஸ்டால்களில், தங்களுக்கு தேவையா-னவற்றை விவசாயிகள் வாங்கி சென்றனர். வனக் கோவிலில், வேண்டுதல் நிமித்தமாக நுாற்றுக்
கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து குருநாத சுவாமியை வழி-பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பண்டிகை இறுதி நாள் என்பதால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

Advertisement