டிரான்ஸ்பார்மரில் குருவிக்கூடு பிடிக்க முயன்ற சிறுவன் பலி
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி, கபிலர்மலை அருகே, செல்லப்-பம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன், 40; கார் டிரைவர். இவ-ரது மனைவி கோகிலா, 35; தம்பதியரின் இளைய மகன் சஞ்சீவி, 9; அரசு பள்ளி நான்காம் வகுப்பு மாணவன். நேற்று பள்ளி விடு-முறை என்பதால், நண்பர்களுடன் விளையாட சென்றார்.
அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் குருவி கூடு கட்டியுள்-ளது. இதைப்பார்த்த சஞ்சீவி, கூட்டில் இருக்கும் குருவியை பிடிக்க ஏறியுள்ளார். அப்போது மின் கம்பியில் கை உரசியதில், மின்சாரம் தாக்கி அந்தரத்தில் தொங்கினார். இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து, கபிலர்மலை மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மின்சாரத்தை துண்டித்து, படுகாயமடைந்த சஞ்சீவியை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோ-தனை செய்த டாக்டர்கள், சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்-தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது, அப்
பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்