ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல்: தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில், 10,000க்கும் மேற்-பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல்-லுக்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்-களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த, 3 நாட்கள் தொடர் விடுமுறையால், ஒகேனக்கல்லுக்கு, 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஒகே-னக்கல் காவிரி
யாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 6,500 கன அடியாக உள்ளதால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்-ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக
ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், ஒகேனக்கல் பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். மெயின் அருவி, மணல் திட்டு, பெரியபாணி
பகுதிகளுக்கு பரிசல் இயக்கப்பட்டது.
மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்