தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைமுறை பாதிக்கும்; அன்புமணி சாடல்

கிருஷ்ணகிரி,: “தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்களின் தலைமு-றையே பாதிக்கப்படும்,” என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் ஊத்தங்கரையில், பா.ம.க., சார்பில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' நடைபய-ணத்தில் நேற்று ஈடுபட்டவர் பர்கூரில் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும், 6 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. அதில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நான் எங்கு கேட்டாலும், தி.மு.க., வரக்கூ-டாது என்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிரிந்த கிருஷ்ணகிரி மாவட்-டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், கொள்ளையோ கொள்ளை. கிரானைட், மணல், கற்கள் என இயற்கை வளங்களை கொள்ளையடிக்கின்றனர்.
நடப்பாண்டில் விவசாயிகள் மாம்பழங்களுக்கு விலை இல்லா-ததால், சாலையில் கொட்டினர். கடந்தாண்டு டன்னுக்கு, 29,000 ரூபாய் கிடைத்த நிலையில் நடப்பாண்டில், 3,000 ரூபாய் கொடுக்கின்றனர். இந்த ஆட்சியில், 4 வயது குழந்தை முதல், 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்-ளைகள் எதிர்காலத்தை நினைத்து பாருங்கள். அனைத்து தாய்மார்-களும், பெற்றோரும், பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புங்கள்.
தமிழக வளர்ச்சிக்காக நாங்கள் ஜாதி வாரியாக கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகிறோம். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் செய்கிறார்கள்.
நீங்கள் ஏன் செய்ய மறுக்கறீர்கள். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்களின் தலைமுறையே பாதிக்கப்படும். 1.30 கோடி படித்த இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லை. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது. அவர்களை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement