தெருக்கூத்து கலைஞருக்கு நடுகல்
கிருஷ்ணகிரி: தெருக்கூத்து கலைஞருக்கு வைக்கப்பட்ட நடுகல், திருப்பத்துார் மாவட்டத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே உள்ள நரிய-நேரியில் உள்ள ஒரு நடுகல்லை ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த நடுகல் சிற்பம், 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உயரமான ஒரு கம்பத்தின் மீது அமைத்த பலகையில் ஒருவன், 2 கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்துள்ளான். தலைக்கு மேல் குடை, ஒரு பெண் அவனுக்கு விளக்கு காட்டுவது போல் உள்ளது. அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞன் இறந்ததன் நினைவாக, அவ்வூர் மக்கள் நடுகல் வைத்துள்ளனர்.
கலைஞனின் முகத்தில் மீசை, அவன் அணிந்திருக்கும் மகுடம், ஆடை ஆகியவை அர்ச்சுனன் வேடம் தரித்திருப்பதை, தபசு மரத்தின் மீது கட்டியிருக்கும் பலகையில், கால்களை தொங்க-விட்டு வலது கையை தலைக்கு மேல் துாக்கி, இடது கையை நெஞ்சில் வைத்து, தவக்கோலத்தில் இருப்பதை காட்டுகிறது. விளக்கை ஏந்தியிருக்கும் பெண் அவனது மனைவி.
தெருக்கூத்துகளில் அர்ச்சுனன் வேடம் தரித்து நடிப்பவரை, தெய்வ சக்தி உடையவராகவே மக்கள் நம்பினர். அவர்கள் இறந்-ததும் அவர்களுக்கு நினைவுக்கல் எடுத்த அடையாளங்கள் தான், இந்த நடுகற்கள். இவ்வகை அர்ச்சுனன் தவக்கோல நடுகல், தமி-ழக நடுகல் வரலாற்றில் புது வரவு. இப்பழக்கம் திருப்பத்துாரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் காணப்படுவது, இப்பகுதி மக்களின் தனி சிறப்புமிக்க கலாசாரத்தின் அடையாளம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில், குழுத்
தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், ஆசிரியர் பாலாஜி உடனிருந்தனர்.
மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்