உக்ரைனின் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா; ஏவுகணை கிடங்கும் தாக்கி அழிப்பு

1

மாஸ்கோ: உக்ரைனின் 300 டிரோன்களையும், சப்சான் ஏவுகணை கிடங்கையும் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சுமார் 3 மணிநேரமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே, கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோலோடியாஸ் கிராமத்தையும், ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோரோன் கிராமத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இந்த நிலையில், உக்ரைனின் 300 டிரோன்களையும், சப்சான் ஏவுகணை கிடங்கையும் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜோலோட்டி கோலோடியாஸ் அருகே ரஷ்ய படைகள் சாதகமான நிலைகளைப் பிடித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்ய படைகளை முன்னேற்றத்தை உக்ரைன் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement