பரிசோதனை சேகரிப்பு தகவல் மையம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளுக்கான பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையத்தை கலெக்டர் சுகபுத்ரா திறந்து வைத்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கலசலிங்கம் ஆனந்தம்மாள் அறக்கட்டளை, அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லுாரியும் இணைந்து நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் கலசலிங்கம் பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் டீன் ஜெயசிங், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி, கலசலிங்கம் பார்மசி கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் ரேகா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement