தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

புதுடில்லி: தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்யும் தேர்தல் செப். 9ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் பார்லிமென்டின் இரு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) எம்பிக்கள் (782 பேர்), துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். வேட்பாளராக போட்டியிடுபவர் ஓட்டளிக்க முடியாது.
தேர்தலில் பாஜ கூட்டணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.17) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு, தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜ தலைவர் நட்டா அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளுடன் பேசுவோம்
@quote@துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பிறகு நட்டா கூறியதாவது: எதிர்க்கட்சிகளுடனும் பேசுவோம். துணை ஜனாதிபதிக்கு நடக்கும் தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். கட்சி மூத்த தலைவர்களும் தொடர்பில் இருக்கின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர் என்றார்.quote
நன்றி
சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ' என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் நட்டா, பார்லி குழு உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததை நினைத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியடைந்தேன். என் கடைசி மூச்சு வரை நாட்டிற்காக கடினமாக உழைப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் வரலாறு
@block_B@சி.பி. ராதாகிருஷ்ணன் (சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்) 1957ம் ஆண்டு அக்.20ல் திருப்பூரில் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். 16 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தில் இருந்தவர். ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக செயலாற்றியவர். 1998 மற்றும் 1999ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் பாஜ சார்பில் கோவை தொகுதியில் இருந்து இரு முறை லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். எம்.பி.யாக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராகப் பணியாற்றினார்.
block_B
@block_P@
பொதுத்துறை நிறுவனங்களுக்கான பார்லிமென்ட் குழு (பி.எஸ்.யு) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் பார்லிமென்ட் சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு ஐநா சபைக்கான பார்லிமென்ட் குழுவில் இடம் பெற்றவர். 2003ம் ஆண்டு அக்.20ல் ஐநா பொதுச்சபையின் 58வது அமர்வில் உரையாற்றிய சிறப்பு பெற்றவர். பின்னர் 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தமிழக பாஜ தலைவராக பொறுப்பு வகித்தவர்.
அப்போது 93 நாட்கள் அவர் மேற்கெண்ட 19,000 கிமீ ரதயாத்திரை பயணம் பிரபலம்.
அனைத்து இந்திய நதிகளையும் இணைப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, தீண்டாமையை நீக்குவது மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது போன்றவற்றை முன்னிலைப்படுத்தி இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய செயலாளராகவும் திறம்பட செயலாற்றியவர். 2004ல் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தைவானுக்கு சென்ற முதல் பார்லிமென்ட் குழுவில் உறுப்பினராக இருந்தவர். block_P
@block_G@
2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் அகில இந்திய கயிறு வாரிய தலைவராக இருந்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி ரூ. 2532 கோடியாக உயர்ந்தது. 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, அவர் கேரளாவிற்கான பாஜவின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்தார். பிப்.12ம் தேதி 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தார். மார்ச் 19, 2024ல் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவிகள் கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டன. பிப்.18ல் 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். தனது முதல் நான்கு மாதங்களுக்குள், ஜார்க்கண்டின் 24 மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். தற்போது மஹாராஷ்டிரா கவர்னராக பதவி வகித்து வருகிறார்.block_G
@block_Y@
ஒரு தீவிர விளையாட்டு வீரரான சி.பி. ராதாகிருஷ்ணன், டேபிள் டென்னிசில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட்டையும் மிகவும் விரும்புவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், நார்வே, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, துருக்கி, சீனா, மலேசியா, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக அரசியலில், பொது வாழ்வில் மரியாதைக்குரிய நபராக அறியப்படுபவர்.block_Y














மேலும்
-
டிரான்ஸ்பார்மரில் குருவிக்கூடு பிடிக்க முயன்ற சிறுவன் பலி
-
குருநாதசுவாமி கோவில் திருவிழா நிறைவு: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்
-
தெருக்கூத்து கலைஞருக்கு நடுகல்
-
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைமுறை பாதிக்கும்; அன்புமணி சாடல்
-
கிட்னி மருத்துவ செலவுக்காக பெண்ணிடம் கல்லீரல் பறிப்பு பள்ளிப்பாளையத்தில் அடுத்தக்கட்ட மோசடி
-
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்