தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

கடம்பத்துார்:பேரம்பாக்கம் ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில், அரசு உத்தரவுப்படி, சில நாட்களாக சவுடு மண் அள்ளப்பட்டு, லாரிகள் வாயிலாக சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சாலையில் சவுடு மண் சிதறி கொண்டே செல்கிறது.
இதனால் பரவும் துாசியால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினரும் தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை வி டுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரான்ஸ்பார்மரில் குருவிக்கூடு பிடிக்க முயன்ற சிறுவன் பலி
-
குருநாதசுவாமி கோவில் திருவிழா நிறைவு: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்
-
தெருக்கூத்து கலைஞருக்கு நடுகல்
-
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைமுறை பாதிக்கும்; அன்புமணி சாடல்
-
கிட்னி மருத்துவ செலவுக்காக பெண்ணிடம் கல்லீரல் பறிப்பு பள்ளிப்பாளையத்தில் அடுத்தக்கட்ட மோசடி
-
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Advertisement
Advertisement