பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்

திண்டிவனம்: பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, கடந்த ஆட்சியில் சட்டமாக்கப்பட்டு, தற்போது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. ராமதாஸ் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாக இடஒதுக்கீடு பெறுவது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு அளவை உறுதி செய்ய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசை கேட்டுக்கொள்வது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசை கேட்டுக்கொள்வது.
தமிழகத்தில், தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்பட வேண்டும். தாய்மொழி தமிழ் உள்ளிட்ட, இந்திய மாநிலங்களின் 22 மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும்.
விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் கனவுத்திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரியில் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்புகளை தடுக்க, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும்.
விதி எண் 13ல்., நிறுவனர் ராமதாஸ் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் கொடுத்த பின்பு, அவரது முன்னிலையில், அவரின் வழிகாட்டுதல் படி தான் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்படுகிறது.
செஞ்சிக்கோட்டையின் பெயர் வரலாற்றுப் பிழையாக இடம் பெற்றுள்ளதால் அதை மாற்றி செஞ்சியர் கோன் காடவன் கோட்டை என்ற உண்மை தகவல் இடம் பெற மத்திய மாநில அரசுகள் தக்கநடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது உள்ளிட்ட 34 தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
கர்நாடகா அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
மும்பையில் கொட்டி தீர்க்கும் கனமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
துணை ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு: அன்புமணி ஆதரவு
-
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
-
3வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்; பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா