முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழர்களுக்கு உயர்வு என்று வரும் போது தள்ளி நிற்பது என்பது எந்தவகையில் பொருத்தமாக இருக்கும்? முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் கோரிக்கை வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 'அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மஹாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் வெறும் அரசியல் அல்ல
பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக நியமனம் செய்ததன் மூலம் முதல்முறையாக தமிழகம் கவுரவிக்கப்பட்டது. அதன்பிறகு, வெங்கடராமன் துணை ஜனாதிபதியாக்கப்பட்டார். இருவரும் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தனர். தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஏபிஜே அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது. தற்போது, தமிழகத்திற்கு மேலும் ஒரு கவுரவமாக, சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நேரத்தில், தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெறும் அரசியல் விஷயம் மட்டுமல்ல. இது நமது மாபெரும் தேசத்தின் தலைமைத்துவத்திற்கு தமிழகம் செய்து வரும் நீடித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதும் ஆகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.














மேலும்
-
தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு
-
சாக்குபோக்கு சொல்லாமல் தமிழர் சி.பி.ஆருக்கு ஆதரவு அளியுங்கள்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!