3வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்; பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா

1

பிஜீங்: பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை சீனா வழங்கியது.


நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், மற்றொரு அண்டை நாடான சீனா நெருக்கம் காட்டி வருகிறது. அந்நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதோடு, வீரர்களுக்கும் சீனா திறன் பயிற்சி அளிக்கிறது. பாக்., ராணுவத்தினர் பயன்படுத்தும், 80 சதவீத ஆயுதங்கள் சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.

கடற்படையை வலுப்படுத்தும் வகையில், சீனாவிடம் இருந்து எட்டு ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வாங்க பாக்., ஒப்பந்தம் போட்டது. அதன்படி, நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிலும், மீதமுள்ள நான்கு கப்பல்கள் பாகிஸ்தானினும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கனவே இரண்டு ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி விட்டது. இந்நிலையில், மூன்றாவது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை, சமீபத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு வழங்கியது. 

சீனாவின் வூஹான் நகரில் நடந்த விழாவில், அந்தக் கப்பல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement