மும்பையில் கொட்டி தீர்க்கும் கனமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு

மும்பை: மும்பையில் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
ஆந்திரா அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மஹாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, கடந்த சில நாட்களாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் அதிக மழை பெ ய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழைக்கு மத்தியில் மும்பை மாநகராட்சி, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குவதாலும், அத்தியாவசிய தேவைகள் தவிர, மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிர்வாக ஆலோசனைகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்
-
தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு
-
சாக்குபோக்கு சொல்லாமல் தமிழர் சி.பி.ஆருக்கு ஆதரவு அளியுங்கள்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!