பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை; இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அவை தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவையை தொடர்ந்து முடங்கி வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவாதம் மட்டும் சரியாக நடந்தது. மற்ற நேரம் எல்லாம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை செயல்படாமல் முடங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று காலை (ஆகஸ்ட் 18) 11 மணிக்கு லோக்சபா கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ''போராட்டம் நடத்தும் எம்பிக்கள் அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். தொடர்ந்து அமளியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என எச்சரித்தார்.
அதுமட்டுமின்றி, அவர், ''சட்டசபையில் அரசு சொத்துக்களை உறுப்பினர்கள் சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் அவ்வாறு முயற்சித்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்'', என்றார்.
பின்னர் பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. வாழ்க்கை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மசோதாவை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
அவர் லோக்சபாவில் விளக்கம் அளித்தார்.
பின்னர் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல், ராஜ்யசபா கூடியதும் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து ராஜ்யசபா தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.







மேலும்
-
தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு
-
சாக்குபோக்கு சொல்லாமல் தமிழர் சி.பி.ஆருக்கு ஆதரவு அளியுங்கள்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!