சூதாட்டம் 14 பேர் கைது

கடலுார்: கடலுார் அருகே பணம் வைத்து சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த வண்டிக்குப்பம் பகுதியில் நேற்று மாலை சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் கணேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சூதாடிய கும்பலை பிடித்தனர். அதில் சிலர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கடலுார், வில்வநகர் தங்கப்பாண்டியன்,30; எஸ்.என்.சாவடி சதீஷ்,23; முதுநகர் கனகசபாபதி,31; மேற்கு ராமாபுரம் ராஜ்குமார்,39; புதுப்பாளையம் ராஜேந்திரன்,38; வண்டிக்குப்பம் சேகர்,42; உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து, 40 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், 3 மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement