தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.73,380!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இம்மாதத் தொடக்கத்தில் உச்சம் தொட்டது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.9,470க்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறையத் தொடங்கிய தங்கம் விலை, கடந்த வாரத்தில் இறங்கு முகத்தில் காணப்பட்டது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.74,200க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. நேற்று (ஆகஸ்ட் 18) தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.74,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவை கண்டு நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
மேலும்
-
இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
-
ஸ்பாட்டுக்கு போகாமல் ஏஐ போட்டோவில் பிரச்னைக்கு தீர்வு: அம்பலமானது சென்னை மாநகராட்சியின் குட்டு
-
டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ -அஜித் தோவல் சந்திப்பு
-
கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
-
பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி; தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி வலியுறுத்தல்