இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி என காங்., தலைவர் கார்கே அறிவித்தார்.
வரும் செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், இன்று ஆக.20ல் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் இண்டி கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இதனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று நண்பகல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். வேட்பாளரை தேர்வு செய்ய முழு அதிகாரத்தை கார்கேவிடம் வழங்கப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி என காங்., தலைவர் கார்கே அறிவித்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஆக.21 கடைசி நாள் ஆகும்.
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
* ஜூலை 8ம் தேதி 1946ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் (இன்று தெலுங்கானா மாநிலம்) பிறந்தார்.
* கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த சுதர்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
* இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது கிடையாது. இப்போது தான் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
* உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.
@block_G@
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சுதர்சன் ரெட்டி கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி உட்பட அனைத்துக்கட்சிகளும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், என்றார்.block_G










மேலும்
-
சட்ட விரோதமாக நடக்கும் ஆபாச பார்கள்; புதுச்சேரியில் வலுக்கிறது எதிர்ப்பு!
-
ஸ்பாட்டுக்கு போகாமல் ஏஐ போட்டோவில் பிரச்னைக்கு தீர்வு: அம்பலமானது சென்னை மாநகராட்சியின் குட்டு
-
டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ -அஜித் தோவல் சந்திப்பு
-
கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
-
பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி; தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி வலியுறுத்தல்