கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

6


மதுரை: தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.


தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி, ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது.

அதே நேரம் உயிருடன் இருப்போர், ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து கொள்கின்றனர். ரத்த உறவுகள் அல்லாதவர்கள் அளிப்பது குற்றமாக உள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு ப குதியை பெற்று, அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.



இதற்காக, ரத்த உறவுகள் போல போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், ''மனித உறுப்புகள் திருட்டு மற்றும் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

Advertisement