சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி: விஜய் பேச்சு

சென்னை: '' வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி,'' மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் பேசினார்.
கூட்டணி எதற்கு
மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது:



நம்முடைய கூட்டணி சுயம் இழந்த கூட்டணியாக இருக்காது. சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் பக்கம் அடிபணிந்து கொண்டு, மறுபுறம் மதசார்பற்ற கூட்டணி என மக்களை ஏமாற்றும் கூட்டணியாக இருக்காது.
@block_Y@நம்பி வருபவர்களுக்கு அரசியல், அதிகாரம் பங்களிக்கப்படும். யார் வருவார், யார் போவார் என கேள்வி வரும். ஒரே பதில் தான் சஸ்பென்சில் சஞ்சாரம் செய்யுங்கள். 2026ல் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. ஒன்று தவெக. இன்னொன்று திமுக. block_Y
பிரதமருக்கு கேள்வி
'எதிர்காலம் வரும்
என் கடமை வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாம். யாருக்கு எதிராக என கேட்கிறீர்கள். வேறு யாரு? மறைமுக உறவுக்காரர்களான பாஜவும் பாய்சன் திமுகவும் தான்.
பிரதமர் மோடி அவர்களே, உங்களிடம் சில கேள்வி கேட்கவேண்டும். தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள்.
நீட் தேர்வு காரணமாக என்ன நடக்கிறது என சொல்லவே மனது வலிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். இதை செய்வீர்களா?
எங்களுக்கு என்ன தேவையோ என்ன என்ன நல்லதோ அதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச அடிமை கூட்டணி ஒன்று.
உங்கள் மைனாரிட்டி ஆட்சி ஓட்டுவதற்காக மறைமுகமாக ஆர்எஸ்எஸ் அடிமை குடும்பம் என இன்னொரு கூட்டணி.
மக்கள் சக்தி இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடி பணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசு பயணம் போகலாம் என திட்டம் தீட்டி வைத்துள்ளீர்களே அதானே. என்னதான் நேரடி, மறைமுக கூட்டணி என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது . மக்கள் எப்படி ஓட்டுப் போடுவார்கள். இங்கு ஒரு எம்பி கூட தராததால் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் பாஜ அரசு ஓரவஞ்சனை செய்கிறது
சங்கம் வைத்து வளர்த்த மண் மதுரை மண் .கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்துவிட்டு எங்கள் வரலாற்றை அழிக்க மறைக்க உள்ளடி முயற்சி செய்கிறீர்கள். தமிழகத்தை தொட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணம் உள்ளது. அதனால் இதை மறைத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்காதீர்கள்.
மத நல்லணக்கத்துக்கு புகழ்பெற்ற மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன். உங்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது.
கட்சியின் நிலை
எம்ஜிஆர் யார் தெரியுமா? அவர் மாஸ் என்றால் என்ன வென தெரியுமா? அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் 'சிஎம் (முதல்வர்)' சீட்டை பற்றி ஒருவராலும் நினைத்து பார்க்க முடியவில்லை. யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. 'எப்படியாவது சிஎம் சீட்டை என்னிடம் கொடுத்து விடுங்கள். எனது நண்பர் வந்த உடன் கொடுத்துவிடுகிறேன்' என எதிரியை கூட கெஞ்ச வைத்தவர்.
@block_P@ஆனால் இப்போது அவர் ஆரம்பித்த கட்சி, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எப்படி இருக்கிறது என நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அப்பாவி தொண்டர்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சட்டசபை தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடணும்? ஆட்சி அமைய வேண்டும் என அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நல்லா தெரியும். பாஜ என்ன வேஷம் போட்டு கொண்டு தமிழகம் வந்தாலும் அவர்கள் வித்தை எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது.block_P
மறைமுககூட்டணி
இப்படி பொருந்தா கூட்டணியாக பாஜ கூட்டணி இருப்பதினால் தான், வெற்று விளம்பர திமுக என்ன செய்கிறது தெரியுமா? பாஜ உடன் உள்ளுக்குள் உறவு வைத்து கொண்டு வெளியில் ஏமாற்றுவது போன்று நாடகம் போட்டுக் கொண்டு,
எதிர்க்கட்சியாக இருந்தால் 'போங்க மோடி' என பலூன் விடுவதும், ஆளுங்கட்சியாக இருந்தால் 'வாங்க மோடி' என குடை பிடித்து கும்பிடு போடுவதும் நடக்கிறது.
@quote@இதுமட்டுமா
ரெய்டு வந்தால் போதும் இதுவரை போகவே போகாத கூட்டத்துக்கு, அதை காரணம் காட்டி டில்லி போவதும், ரகசியமாக சந்திப்பும் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு பிறகு, அந்த ரெய்டு விவகாரம் காணாமல் போகும். quote
கதறல் கேட்கிறதா
இப்படி தமிழகத்தில் இந்த ஆட்சி லட்சணத்தை பார்த்து கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்.
'ஒரு தவறு செய்தால் தெரிந்து செய்தால் அவர் கபட நாடக ஸ்டாலின் ஆகவே இருந்தாலும்' கேட்பேன்.
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை, நியாயம் உள்ளதா?
ஊழல் இல்லாமல் உள்ளதா?
சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா?
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
டாஸ்மாக்கில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்தது என சொல்கிறார்கள். மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இதை பார்த்து வாயே இல்லாத ஊர்கூட வயிறு வலிக்க சிரிக்கிறது.
பொய் வாக்குறுதி
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும் போதுமா? படிக்க போகும் போதும் வேலைக்கு போகும்போதும் பாதுகாப்பு இல்லை என கதறுகிறார்கள். அந்த கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்கிறதா ? இதில் உங்களை அப்பா என கூப்பிடுகிறார்கள் என சொல்கிறீர்கள்.
பெண்களுக்கு மட்டுமா பொய்யான வாக்குறுதி கொடுத்தீர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு பொய் வாக்குறுதி கொடுத்தீர்கள். பரந்தூரில் பாதிப்பு வராது என சொன்னீர்கள். போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்காமல் ஏமாற்றினீர்கள். எப்படி கேட்டாலும் பதில் வராது. இருந்தால் தானே? செய்வோம் செய்வோம் என சொன்னார்களே செஞ்சாங்களா? சொன்னது எல்லாம் செஞ்சாங்களா?
போர் முழக்கம்
மக்களின் குரல் முதல்வருக்கு கேட்குதா இது சாதாரண முழக்கம் தான். விரைவில் மக்களை சந்திக்க போகிறேன். அவர்களுடன் பேச போகிறேன். இது சாதாரண முழக்கம் இடி முழக்கமாக மாறும். அத்தோடு நிற்காமல் போர் முழக்கமாக மாறும். இனி உங்களால் தூங்க முடியாது.
ஒவ்வொருவரும் கட்சி துவங்கிய பிறகு தான் ஒவ்வொரு வீட்டுக்கு போக முயற்சிப்பார்கள்.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல வீட்டுக்குள் சென்ற பிறகு தான் கட்சியை ஆரம்பித்துள்ளோம்
அதனால் 2026 ல் கபட திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிறோம்.
இப்போது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்போகிறேன்.
மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய்
மதுரை மேற்கு வேட்பாளர் - விஜய்
மதுரை மத்த வேட்பாளர் - விஜய்
மதுரை தெற்கு வேட்பாளர் - விஜய்
மதுரை வடக்கு வேட்பாளர் - விஜய்
மேலூர் - விஜய்
சோழந்தான் - விஜய்
திருப்பரங்குன்றம் - விஜய்
திருமங்கலம் - விஜய்
உசிலம்பட்டி - விஜய்
234 தொகுதகளிலும் விஜய் தான் உங்களின் சின்னம். இன்னும் உங்கள் வீட்டில் இருப்பவர் தான் வேட்பாளராக நிற்க போகிறார்.அவரும் நானும் வேறு வேறு கிடையாது. நீங்க அவருக்கு ஓட்டு போட்டால் எனக்கு ஓட்டு போட்ட மாதிரி. இந்த முகத்துக்கு ஓட்டு போட்டால் உங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றது போன்று. நம்மை விட நமது எதிரிகளுக்கு தெரியும்.அதிகார பலத்தை தூக்கி வருவார்கள்.பார்த்து கொள்கிறோம். இதனை தவெக எதிர்கொள்ளும். சமாளிக்கும்.
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எப்போதும் தாய்மாமனாக இருப்பேன். நங்கள் எப்போதும் ரத்த உறவு. எனது ரேசன் கார்டில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்கலாம். உங்களது ரேசன் கார்டில் எனது பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் உறவு தான். இந்த உறவு பிரிக்க முடியாது. உங்களையும் என்னையையும் பிரிக்க எந்த அரசியலாலும் முடியாது. எந்த சக்தியாலும் முடியாது.
நன்றிக்கடன்
நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன். பெரிய படையோடு வந்துள்ளேன். மாபெரும் படை வரிசையோடு அனைத்துக்கும் தயாராகி வந்துள்ளேன்.
அரசியலுக்கு வருவதற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். 30 வருடத்துக்கு மேல், மக்கள் தான் என்னுடன் நிற்கின்றார்கள். தாங்கி பிடிக்கிறார்கள். மனதில் தாங்கிபிடிக்கிறார்கள். வேறு யார் விடவும் அன்பையும் ஆதரவையும் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் ஒருவனாக ஆக்கி உள்ளீர்கள்
நீங்கள் கடவுள் கொடுத்த வரம். உங்களை எப்படி மறப்பேன். உங்களை பார்த்து தான் எதிரிகளுக்கு பற்றி எரிகிறது. அதற்கு என்ன செய்ய முடியும். யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
@quote@இவ்வளவு செய்த மக்களுக்கு நன்றிக்கடனை முழுமையாக திருப்பி செலுத்த முடியுமா எனக்கேட்டால் நிச்சயம் முடியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் முடியாது. வாழ்நாள் முழுவதும் நமது மக்களுக்கு ஆதரவாக துணையாக நிற்பதற்காகவும், உழைப்பதை தவிரவும் வேறு எண்ணம் இல்லை. வேறு வேலையும் இல்லை. இது தான் எனது வேலை. என் பணி மக்கள் பணி செய்து கிடப்பதே.quote
@block_G@
அப்புறம் ஒரு அரசியல் தலைவன், சினிமாக்காரன் நல்லவனா? கெட்டவனா ? அவன் உண்மையானவானா? அது தான் முக்கியம். சும்மா சினிமாக்காரன் சினிமாக்காரன் என சொல்லிக்கொண்டு உள்ளனர். அம்பேத்கர், காமராஜர், நல்லகண்ணுவை தோற்கடித்தவர் சினிமாக்காரன் அல்ல. அரசியல்வாதி. நல்ல தலைவர்களை எதிர்த்து நின்று தோற்கடிக்கவேண்டும் என்பதை உருவாக்கியது சினிமாக்காரன் அல்ல அரசியல்வாதி. எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது. block_G
இவ்வாறு விஜய் பேசினார்.














