இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு

வாஷிங்டன்: இந்தியா மீது கூடுதலாக வரி விதிப்பை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன், வாஷிங்டனில்உள்ள இவரது வீடு, அலுவலகத்தில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அமைப்பின் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டு குறித்த பின்னணியில் நடந்த விசாரணையில், அமெரிக்க அதிபர் ஒரு பகுத்தறிவற்றவர் என ஜான் போல்டன் விமர்சனம் செய்ததுடன், ஒரு இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட அதிபர் டிரம்ப்பை கண்டித்தார். இதன் எதிரொலியாகத்தான் அவரது வீட்டில் ரெய்டு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெய்டு நடைபெற்ற ஜான் போல்டன் இல்லத்தில் ஏராளமான ஆவணங்களை புலானய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக டெனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன் கடந்த பிப்ரவரியில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். காஷ்யாப் படேல் உத்தரவின் பேரில் இந்த ரெய்டு நடைபெற்றதுள்ளதாக கூறப்படுகிறது.








மேலும்
-
தவெக மாநாட்டில் உடைத்தெறியப்பட்ட 10,000 பிளாஸ்டிக் சேர்: போர்க்களம் போல் காட்சியளித்த மைதானம்
-
234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் முகத்துக்காக ஓட்டு விழுமா; சீமான் பதில்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி
-
ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு
-
தி.மு.க., ஆட்சியில் 15,380 மூட்டை அரிசி வீணடிப்பு; இபிஎஸ் குற்றச்சாட்டு