உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை; ரஷ்யா திட்டவட்டம்

4

மாஸ்கோ: அமெரிக்கா உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய முயற்சித்த போதிலும் , ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ம் பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார்.


பின்னர், போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க வைக்க முயற்சி எடுப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:

ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் தயாரான பிறகு உக்ரைன் அதிபரை சந்திக்க ரஷ்ய அதிபர் தயாராக இருக்கிறார்.


அமெரிக்கா கூறும் கொள்கைகள் பல ஏற்றுக் கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. நேட்டோ அமைப்பில் இணைய கூடாது. பிராந்திய பிரச்னைகள் பற்றிய விவாதம் உட்பட அளவற்றை ஏற்றுக்கொள்ள ஜெலன்ஸ்கி மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement