ஆக.30ல் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; அதிமுக அறிவிப்பு

சென்னை: ஆக.30ம் தேதி இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 30.8.2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement