உலக விளையாட்டு செய்திகள்

பனிச்சறுக்கு வீராங்கனை காயம்
வெலிங்டன்: சீன பனிச்சறுக்கு வீராங்கனை எய்லீன் பெங் கு 21. பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் (2022) 2 தங்கம், ஒரு வெள்ளி வென்ற இவர், நியூசிலாந்தில் பயிற்சி மேற்கொண்ட போது கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதற்கு ரசிகர் ஒருவரின் குறுக்கீடு காரணம். காயத்தின் தன்மை பற்றி தெரியவில்லை. எய்லீன் வெளியிட்ட செய்தியில்,'மனித தவறால் பெரும் விபத்து ஏற்பட்டது. மருத்துவ பரிதசோதனைக்காக கிறைஸ்ட்சர்ச் பறக்கிறேன். விரைவில் பனியில் சாகசம் நிகழ்த்த காத்திருக்கிறேன்,''என்றார்.
அர்ஜென்டினா அசத்தல்
பாங்காக்: தாய்லாந்தில், பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் அர்ஜென்டினா, செக்குடியரசு அணிகள் மோதின. அர்ஜென்டினா 3-1 (25-22, 25-18, 21-25, 25-14) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
காலிறுதியில் பிரான்ஸ்
ஒராடியா: ருமேனியாவில் நடக்கும் ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் (18 வயது) 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ் அணி 12-11 என, நெதர்லாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் அணி 14-7 என, ஜெர்மனியை அணியை தோற்கடித்தது.
கேப்டவுனில் பைனல்
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், வரும் டிச. 26ல் 'எஸ்.ஏ., டி-20' தொடரின் 4வது சீசன் துவங்குகிறது. பைனல், அடுத்த ஆண்டு ஜன. 25ல் கேப்டவுனில் நடக்கவுள்ளது. 'பிளே-ஆப்' சுற்று போட்டிகள், டர்பன் (ஜன. 21, தகுதிச் சுற்று-1), செஞ்சுரியன் (ஜன. 22, எலிமினேட்டர்), ஜோகனஸ்பர்க்கில் (ஜன. 23, தகுதிச் சுற்று-2) நடக்கவுள்ளன.
எக்ஸ்டிராஸ்
* மும்பையில் நடந்த அனைத்து இந்திய மாஸ்டர்ஸ் செஸ் கிளாசிகல் தொடரில், 8 சுற்றுகளின் முடிவில் அரவிந்த் ஐயர், தர்ஷ் ஷெட்டி தலா 7.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். பின், 'சூப்பர் டை பிரேக்கர்' முறையில் அரவிந்த் சாம்பியன் ஆனார்.
* இந்திய இடது கை சுழற்பந்துவீச்சு வீராங்கனை கோஹர் சுல்தானா 37, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2008ல் இந்திய அணியில் அறிமுகமான இவர், 50 ஒருநாள் (66 விக்.,), 37 சர்வதேச 'டி-20' (29 விக்.,) போட்டிகளில் விளையாடினார்.
* பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த ஐ.சி.சி., பெண்கள் உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு மாற்றப்பட்டன. பிரிமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மரணமடைந்ததால், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும்
-
பார்த்தீனியம் செடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
-
கழிவுநீராக மாறிய மழைநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
-
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
-
சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை ராணுவ இணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
-
'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்' மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்
-
நிபந்தனையை ஏற்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல்