ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு

கோல்கட்டா: இந்தியாவில், துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன் நடக்கிறது. இன்று, கோல்கட்டாவில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' வடகிழக்கு யுனைடெட், டைமண்ட் ஹார்பர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன், ரூ. 1.21 கோடி பரிசு வழங்கப்படும். இது, துாரந்த் கோப்பை கால்பந்து வரலாற்றில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசு. கடந்த ஆண்டு கோப்பை வென்ற வடகிழக்கு யுனைடெட் அணிக்கு ரூ. 1.05 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பைனல் வரை சென்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 60 லட்சம், அரையிறுதியோடு திரும்பும் அணிகளுக்கு தலா ரூ. 25 லட்சம், காலிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ரூ. 15 லட்சம், சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்', அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் பூட்', சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் கிளவுஸ்' விருது பெறுபவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
மேலும்
-
பார்த்தீனியம் செடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
-
கழிவுநீராக மாறிய மழைநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
-
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
-
சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை ராணுவ இணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
-
'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்' மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்
-
நிபந்தனையை ஏற்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல்