தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி

மக்காய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. மக்காய் நகரில் 2வது போட்டி நடந்தது.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (0), ரிக்கிள்டன் (8) ஏமாற்றினர். டோனி டி சோர்ஜி (38) நம்பிக்கை தந்தார். பிரீட்ஸ்கி (88), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (74) அரைசதம் கடந்தனர். பிரவிஸ் (1) ஏமாற்றினார். வியான் முல்டர் (26), கேஷவ் மஹாராஜ் (22*) ஓரளவு கைகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.


ஹெட் ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (6), லபுசேன் (1), கேப்டன் மிட்சல் மார்ஷ் (18) சோபிக்கவில்லை. கேமிரான் கிரீன் (35) ஆறுதல் தந்தார். அலெக்ஸ் கேரி (13), ஆரோன் ஹார்டி (10) நிலைக்கவில்லை. ஜோஷ் இங்லிஸ் (87) ஆறுதல் தந்தார்.

ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் 193 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் வேகத்தில் மிரட்டிய லுங்கிடி 5 விக்கெட் சாய்த்தார்.



@quote@

பிரீட்ஸ்கி சாதனை



தென் ஆப்ரிக்காவின் பிரீட்ஸ்கி, ஒருநாள் போட்டியில் அறிமுகமான முதல் நான்கு போட்டியிலும் 50 அல்லது அதற்கு மேல் ரன் (150, 83, 57, 88) குவித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் இந்தியாவின் சித்து, தனது முதல் 5 ஒருநாள் போட்டியில் (1987), 4 அரைசதம் (73, 75, பேட் செய்யவில்லை, 51, 55) விளாசி இருந்தார். பிரிமியர் லீக் ஏலத்தில் பிரீட்ஸ்கியை ஒப்பந்தம் செய்ய பல்வேறு அணிகள் முன்வரலாம்.quote

Advertisement