நிபந்தனையை ஏற்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல்
ஜெருசலேம்: 'எங்கள் நிபந்தனைகளை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ஏற்காவிட்டால், காசா நகரை அழித்துவிடுவோம்' என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023ல் மோசமான தாக்குதலை நிகழ்த்தினர்.
இதில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் நடவடிக்கையை துவங்கியது. இந்த போரில் இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் தந்தன.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆயுதங்களை கைவிட்டு, எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை விடுவித்தால் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்றது. ஆனால் பாலஸ்தீனம் தனி நாடாகும் வரை ஆயுதங்களை கைவிட முடியாது என ஹமாஸ் கூறியது.
இதையடுத்து தற்காலிக போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. பிணைக்கைதிகள் விடுவிப்பு, பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது, படைகளை படிப் படியாக வாபஸ் பெறுவது, நீண்ட கால போர் நிறுத்த பேச்சை துவக்குவது ஆகிய திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
அவற்றை ஹமாஸ் ஏற்றது. இதன் படி 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயாராக வேண்டும்.
'இல்லையென்றால் முந்தைய போரில் அழிக்கப்பட்டு இடிபாடுகளாக உள்ள ரபா மற்றும் பெய்ட் ஹனுான் நகரங்களை போல் காசாவும் மாறும். மொத்தமாக அழித்துவிடுவோம்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஹமாஸ் வசம் 20 முதல் 50 பிணைக்கைதிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. 251 பேரில் 143 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டனர். 49க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
மேலும்
-
பொன்முடியின் பேச்சு வீடியோ போலீசிடம் கேட்கிறது கோர்ட்
-
த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற கோத்தகிரி இளைஞர் மரணம்
-
பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு கடல கொல்லியில் பகுதியில் பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு
-
ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்
-
சாலையோரம் கொட்டப்பட்ட பாறை கற்களால் இடையூறு
-
துாய்மை பணிக்கு ஐந்து 'ரோபோடிக்' இயந்திரம் பணியாளர்கள் நலவாரிய நிகழ்ச்சியில் தகவல்