சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை ராணுவ இணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை:'ட்ரோன்கள்' உற்பத்தி செய்யும் 'கருடா ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட் அப்' நிறுவனம், சென்னை தாழம்பூரில் அமைக்கும், புதிய ராணுவ 'ட்ரோன்' உற்பத்தி ஆலைக்கு, ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேத் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்வில், ஐந்து விதமான, ராணுவ தாக்குதல் ட்ரோன்களை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, ராணுவத்தின் 'ஜம்மு அண்டு காஷ்மீர் ரைபிள்ஸ்' படைப் பிரிவின் 13வது பட்டாலியனுடன் இணைந்து, ராணுவ ட்ரோன் ஆய்வகத்தை அமைக்க உள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, 'கருடா ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்னீஸ்வர் கூறியதாவது:
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள, ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை, 76 ஏக்கரில் அமைய உள்ளது. நீர், காற்று மற்றும் நிலத்தில் பயணிக்கும் தாக்குதல் ட்ரோன்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய, இந்த ஆலை பயன்படும்.
விவசாயம், சுரங்கம், தொழில்துறை, ராணுவம் என, பல்வேறு துறைகளுக்கு ட்ரோன்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதுவரை, 4,000க்கும் அதிகமான ட்ரோன்களை, உலக அளவில் விற்பனை செய்துள்ளோம்.
உற்பத்தியில், 70 சதவீதம் உள்நாட்டு மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில், 19க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்று இருந்தாலும், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ், பிரான்சின் தாலிஸ், அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் உள்ளிட்ட பல ராணுவ உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
@block_B@ ஐந்து வகை ட்ரோன்கள்
அவலாஞ்சி விக்டிம் ட்ரோன்: உயரமான பகுதிகளில் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
ஸ்வார்ம் ட்ரோன்: ஒரே நேரத்தில் கூட்டமாக எதிர் தாக்குதலை மேற்கொள்ளும்.
ஜவான் ட்ரோன்: முதல் நிலை ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக,துல்லிய தாக்குதலில் ஈடுபடும்.
கேனிஸ்டர் ட்ராப்பிங் ட்ரோன்: வெடி குண்டுகளை வீசும்.
ட்ரோனி 2.0 ட்ரோன்: பொது மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட ட்ரோன். block_B
மேலும்
-
பொன்முடியின் பேச்சு வீடியோ போலீசிடம் கேட்கிறது கோர்ட்
-
த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற கோத்தகிரி இளைஞர் மரணம்
-
பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு கடல கொல்லியில் பகுதியில் பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு
-
ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்
-
சாலையோரம் கொட்டப்பட்ட பாறை கற்களால் இடையூறு
-
துாய்மை பணிக்கு ஐந்து 'ரோபோடிக்' இயந்திரம் பணியாளர்கள் நலவாரிய நிகழ்ச்சியில் தகவல்