பார்த்தீனியம் செடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

திருவூர்:திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நச்சுத்தன்மை நிறைந்த பார்த்தீனியம் செடி குறித்த விழிப்புணர்வு நடந்தது.

திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில், திருவள்ளூர் ஒன்றியம் தொழுவூர் கிராமத்தில், பார்த்தீனியம் செடி மற்றும் அதன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

இதில், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் சிவகாமி கூறியதாவது:

பார்த்தீனியம் செடி தீங்கு விளைவிக்கும் ஒருவகை தாவர களைச்செடி. இது, மனிதர்களுக்கு தோல் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழாய் அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். கால்நடைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்னைகளை உருவாக்கும்.

வேகமாக பெருகி வரும் இந்த வகை செடிகளை, வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். மேலும், உப்பு கரைசலை தெளித்தல் மற்றும் களைக்கொல்லியான கிளைபோசிட் 1.5 சதவீதம் அளவுக்கு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement