துாய்மை பணிக்கு ஐந்து 'ரோபோடிக்' இயந்திரம் பணியாளர்கள் நலவாரிய நிகழ்ச்சியில் தகவல்
ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமிபவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகித்து, 10 பயனாளிகளுக்கு பல்வேறு உதவி தொகைக்கான காசோலை மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கி பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வார்டுகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் கலெக்டர் வாயிலாக என்னிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். துாய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான முக கவசம் கையுறை, காலணி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.
துாய்மை பணிக்கு ஐந்து ரோபோடிக் துாய்மை பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதனை உடனடியாக அந்த துறை அலுவலர்கள் அல்லது கலெக்டரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 'ரோபோட்டிக்' இயந்திரம் வாயிலாக துாய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பும் பட்சத்தில், 5 ரோபோட்டிக் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். துாய்மை பணியாளர்களின் நலன் கருதி மாதம் ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு
-
'சில்லித்தனமான வேலையில் ஒருபோதும் தி.மு.க., ஈடுபடாது; த.வெ.க.,வுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி
-
' அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும்தான் போட்டி' திடீர் சாம்பார், திடீர் ‛பாஸ்ட் புட்' மாதிரி விஜய் என கிண்டல்
-
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
தமிழக சிறைகளில் 'தேவையில்லாத' ஆவணங்களை அழிக்க டி.ஜி.பி., உத்தரவு' ஊழல்களை மூடி மறைக்க திட்டமா
-
ரயில் சேவையில் மாற்றம்