அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்  

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டம் உட்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கையில் கோட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

துணை தலைவர் முத்துக்குமார், மகாலட்சுமி, இணை செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், ஐ.சி.டி.எஸ்., சங்க பொது செயலாளர் வாசுகி, மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர் சங்க மாநில துணை தலைவர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement