ரயில் சேவையில் மாற்றம்
மதுரை : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு - சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை - ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். இவ்விரு ரயில்களும் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக, ஆக., 27 முதல் 30 வரை மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். ஆக., 28 முதல் 31 வரை அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06846), காலை 9:30 மணிக்கு மதுரை வரும்.
மாற்றுப் பாதை ஆக.,27 முதல் 30 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஆக., 28, 31ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), ஆக., 29ல் கன்னியாகுமரி - ஐதராபாத் (07229), ஆக.,30ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666)ஆகிய ரயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயங்கும்.
தாமதம் ஆக., 28ல் மதுரை - பிகானீர் வாராந்திர ரயில் (22631), 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.
மேலும்
-
விழுப்புரத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஆய்வு
-
முதல்வரை 'அங்கிள்' என சொல்வதா? விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
-
அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு: ஒரு சவரன் ரூ.74,520!
-
பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி
-
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்