சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு

கள்ளக்குறிச்சி உலகங்காத்தானில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது.
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமாரின் 71வது பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் மில் கேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக நடந்து வரும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியினை பா.ஜ., நிர்வாகி ஈஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்து, கூறியதாவது;
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் டேப்லெட்கள் வழங்கப்படுகிறது.
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண் கண்ணாடி, விவசாயிகளுக்கு ஸ்பிரேயர் இயந்திரம், காதுகேட்கும் கருவிகள், 25 நுாலகங்களுக்கு புத்தக தொகுப்புகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என கூறினார்.
ஆய்வின் போது பா.ஜ., கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, வர்த்தக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
விழுப்புரத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஆய்வு
-
முதல்வரை 'அங்கிள்' என சொல்வதா? விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
-
அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு: ஒரு சவரன் ரூ.74,520!
-
பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி
-
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்